ஜே. வி. பி தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துதுரையாடல்!
 Monday, July 10th, 2023
        
                    Monday, July 10th, 2023
            
கடற்றொழில் அமைச்சுக்கு இன்று வருகை தந்த ஜே. வி. பியின் தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கடற்றொழிலாளர் தொடர்பாக கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின்போது இந்திய படகுகளின் அத்துமீறல்கள், சந்தையில் மீன்களின் விலை உயர்வு மற்றும் கடல் வளங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆழ்கடல் படகு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Related posts:
நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் - பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        