சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 14th, 2024

தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!,.. எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற  எமது மக்களின் நம்பிக்கை பெருநாளாக  தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச்செய்தியில்,

தைப்பொங்கல் திருநாள் எமது மக்களின் பண்பாட்டு பெருநாள்,. உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும்  எமது மக்கள் தொன்று தொட்டு கொண்டாடி வரவேற்று வரும் தொன்மைத்திருநாள் இது,..தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாற்றம் ஒன்றை எதிர் பார்க்கும் எமது மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி பொங்கி படைத்து வருகிறார்கள்,.

அது போல்,  எமது மக்கள் தம் வாழ்வில் இடர் சூழ்ந்த பொழுதுகளில் தம்முடன் கூடவே இருந்து துயர் தீர்த்தவர்களுக்கும்,..இலட்சியங்களை எட்ட முடிந்த, அழிவுகளற்ற யதார்த்த வழிமுறையில்  தம்மை வழி நடத்தி செல்வோருக்கும், நன்றி செலுத்தும் பண்பாட்டையும் எமது மக்கள் இன்னமும் வளர்த்தெடுக்க வேண்டும்.

குறைவில்லாது உயிர்கள் வாழவும், மேன்மை மிகு  நீதி விளங்கவும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதி நிலவவும்,

இல்லாமை எனும் இருள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழவும்,.. நல்வழி காட்டும் நற்றார் மீதான நம்பிக்கையிலும் உறுதியாய் இருத்தல் வேண்டும். இலட்சியத்தில் தோற்றால், சூட்சுமத்தை மாற்றுங்கள்,  இலட்சியத்தை அல்ல என்ற உபதேசங்களை ஏற்று. தோற்றுப்போன  வழிமுறைகளை கைவிட்டு,  நாம் வகுத்து நடக்கும் நடை முறை யதார்த்த  வழிமுறையில்,..  சுபீட்சமான சுதந்திர வாழ்வை சகலரும் பூரணமாக அனுபவிக்கும் மகிழ் காலத்தை விரைவாக வென்றெடுப்போம்.

நாம் நீட்டியிருக்கும் தேசிய நல்லிணக்க கரங்களின் அழைப்பை ஏற்று  எமது மக்களை நோக்கியும் பதில் கரம் நீட்டும் சாதகமான நிலைமைகள் கனிந்து வந்திருக்கின்றன.

சூழ்நிலைகளை சாதகமாக பயன் படுத்தி மாற்றங்களை உருவாக்குவோம். அறம் வெல்லும்,.. அநீதி தோற்கும்,…எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்…..

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும்  புது வாழ்வு பூக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்...

புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய...
நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகி...