ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Friday, January 12th, 2024
அண்மையில் வடக்கிற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்தி குழுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அக்கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் 2024 ஆண்டுக்கான இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சரும், யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சூம் செயலி ஊடக நடத்தினார்.
யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சூம் செயலி ஊடான கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரும், அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவருமான திருமதி சார்ள்ஸ் அவர்களும் , யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாவட்டத்தின் அரச அதிபர் தலைமையிலான அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


