ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்பு!

Monday, April 15th, 2019

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் கலந்து சிறப்பித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்வாண்டுக்கான புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவர்களின் குறித்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்ததனர். இதன்போது  அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் என்று வாழ்த்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Related posts: