செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Friday, April 12th, 2024

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்து மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகயுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்து மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.இந்நிலையிலேயே அமைச்சர் குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார்.

முன்பதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலாள திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின்போது வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து

000

Related posts:

சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன - மட்டக்களப்பு நாவலடி கடற்ற...
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...
இடமாற்றத்தை மீற முடியாது - எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக சமுர்த்திப் பணிப்ப...

விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் M....
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!