சுபீட்சத்தின் வீட்டை பயனாளிக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 29th, 2021

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பளை நகர் பிரதேசத்தில் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் ஆதரவு தாராளமாக இருந்திருக்குமாயின் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

பளை நகரில் ‘கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்’ எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்து உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

Related posts:

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!

காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை  - எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் ப...
பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ள...