சீன அரசு நிதி உதவி – துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!
Thursday, May 23rd, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு கிழக்கின் துறைசார் அதிகாரிகளுடன் நிகழ் நிலை ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
நாட்டில் 15 கடற்றொழில் மாவட்டங்கள் உள்ள நிலையில் வடக்கு கிழக்கின் கடற்றொழில் சார் மக்களின் நலன்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த சீன அரசு இணங்கியிருந்தது.
அதனடிப்படையில் சீன அரசின் 1500 மில்லியன் உதவித்திட்டத்தின் கீழ் 500 மில்லியன் நிதியில் அரிசியு 500 மில்லியன் நிதியில் வீட்டுத்திட்டமும் 500 மில்லியனுக்கு வலையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!
சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீ...
நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|


