சீனாவின் உதவியுடன் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பயனாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Thursday, December 16th, 2021

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரின் அழைப்பினை ஏற்று, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உதவித் திட்டங்களை பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

கொரோனா பரவல் உட்பட பல்வேறு காரணங்களினால் வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், சீனாவினால் முதல் கட்டமாக குறித்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது - ச...
ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் - கிளிநொச்சி யில்...

பாத்தீனியத்தை ஒழிக்க மக்களின் பங்களிப்பும் அவசியம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பண...
இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன்...