சிலாபத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் துறைமுகங்கள் பலவற்றையும் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, May 13th, 2023

சிலாபத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிலாபம் கடற்றொழிலாளர் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை சந்தித்து, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அத்துடன் சிலாபம் மீன்பிடித் துறைமுகத்திற்கும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் சந்தை கட்டிடத்தில் விற்பனை செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதனிடையே வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் மற்றும் பலநாள் கலன்களின் உரிமையாளர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், சில விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். –

இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் ஐஸ் கட்டிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆராயப்பட்டது.

வெல்லமன்கர பகுதியில் செயற்பட்டு வருகின்ற ஐஸ் கட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தல் மற்றும் உற்பத்தி செலவை கட்டுப்படுத்தி குறைந்த விலையில் ஐஸ் கட்டிகளை விநியோகிப்பது தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறி...
அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...