சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் – களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்! ….

Sunday, April 21st, 2024


சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில்  பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு தீர்வுகாணும் வகையில் குறித்த அமைவிடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலும் குறித்த பிரச்சினைக்கு தீர்வை  மையப்படுத்தியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த நேரடி கள விஜயம் இடம்பெற்றது.

இந்த விஜயத்தில் யாழ் அரச அதிபர் பிரதீபன் , மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் சத்தியசோதி,கூட்டுறவு ஆசையாளர் தேவனந்தினி பாபு, உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் , நகர மற்றும் பிரதேச சபை செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்த...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...