சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Monday, June 21st, 2021

கொறோனா அச்சுறுத்தல் நீங்கி நாட்டில் சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கு மாகாணத்தில்  உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடன்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவுச் சங்க நிர்வாகங்களின் பதவிக் காலம் நிறைவடைந்த போதிலும், கொறோனா பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவற்றுக்கான புதிய நிர்வாகங்களை தெரிவு செய்ய முடியாத சூழல் காணப்படுகின்றது.

இதுதொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், கூட்டுறவுச் சங்க நிர்வாகங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பதன் மூலம், தற்போதைய அசாதாரண சூழலில் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின்  செயற்பாடுளையும் தடங்கல்  இன்றி மேற்கொள்ள  முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் ம...
ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் பயணிக்கும் - ...