சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
Saturday, December 9th, 2017
எமது மக்களுக்கு நிவாரணங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எமது மக்கள் எதிர்ப்பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தில் கணிசமான விருத்தியனைக் காண்பதற்கு எமது மக்களது சொந்த வளங்களை விடுவி;த்தாலே போதுமானது. என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந் தா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
பொருளாதார பின்னடைவில் எமது மக்கள் இருக்கின்றார்கள் எனத் தெரிந்தே வாழ்வாதார உதவிகள் என அவ்வப்போது ஏதாவது உதவிகள் வழங்கப்படுகின்றன. எமது மக்களின் வளங்களை விட்டுக் கொடுத்தால் இத்தகைய உதவிகள் எமது மக்களுக்கத் தேவைப்படாது என்ற நிலை இருக்கும்போது, அதனை செய்யாமல், யானைப் பசிக்கு சோளப் பொறி போல் வழங்கப்படுகின்ற வாழ்வாதாரத் திட்டங்களில் இதுவரையில் எந்தத் திட்டம் முழுமையான பயன்களை எமது மக்களுக்கு வழங்கியிருக்கின்றது? என்பதை மீளாய்வுச் செய்து பார்க்க வேண்டும்.
காற்றடிக்கும் காலத்தில் மாவையும், மழை பெய்யும் காலத்தில் உப்பையும் விற்கப்போன கதை போல, காலகட்டங்கள் அறியாமல் வாழ்வாதார உதவிகளை வழங்கிவிட்டு, திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது.
மறு பக்கத்தில், வடக்கு மாகாண சபையின் மூலமாக தற்போதிருக்கின்ற ஏற்பாடுகளுக்கு அமைவாக எமது மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு போதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற போதிலும், வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற நிர்வாகம் காரணமாக அந்த வாய்ப்பும் எமது மக்களுக்கு கிட்டாமல் போயுள்ளது.

Related posts:
|
|
|


