சரியான தெரிவுகளே அபிவிருத்தி திட்டங்களை முழுகையாக்கும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, April 3rd, 2024


சரியாக இனங்காணப்பட்ட தனியார் முதலீட்டாளர்களின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   மக்கள் தாம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கான தெரிவுகளை சரியானதாக இனம் கண்டு கொள்வது அவசியமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

முழங்காவிலில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் பயிச்செய்கையில் ஈடுபட்டுவரும் கமக்கார அமைப்புகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கலந்துரையாடியுள்ளனர்
இதன்போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக தொடர்ச்சியான வெப்பத்துடன் கூடிய கால நிலை காரணமாக பயிச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் பயிர் அழிவுகள் ஏற்படுகின்றன

இதனை கருத்திற்கொண்டு தமது பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி புபுனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்ததுடன்
விவசாய நடவடிக்கைகளை  முன்னெடுப்பதற்கு   பொருளாதார ரீதியான உதவிகளையும் பெற்றுத் தருமாறும் கோரியிருந்தனர்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் வனவள திணைக்களங்களால் ஏற்படும் இடையுறுகள் பிரதேசத்தின் அபிவிருத்தி குறிப்பாக வீதி அபிவிருத்திகள்  மற்றும் பொன்னாவெளி பிரதேசத்தில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள சிமேந்து தொழிற்சாலை தொடர்பில் நிலவும் சாதகபாதக விடயங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அ...