சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021

நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி திட்டத்தினை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, மலையாளபுரத்தில் இன்று (22.12.2021) புதிய சமர்த்தி வங்கி கிளையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

“ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் திட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள சமுர்த்தி திட்டம், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பாரபட்சமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தினை எமது மக்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட விரும்புகின்றவர்கள் சுமார் 20 இலட்சம் வரையில் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று பல்வேறு வாய்ப்புக்களை சமுர்த்தி திட்டம் உள்ளடக்கியிருக்கின்றது. அனைத்தும் உரிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற சமுர்த்தி வெற்றிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட சமர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம...
விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதி...
அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் - அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு அன...