கோணேசர் ஆலய வளாக பிரச்சினை – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அனைவரது ஆதரவும் தேவை – இந்து மத பீடம் கோரிக்கை!

Wednesday, September 14th, 2022

கோணேஸ்வர  ஆலய வளாக பிரச்சினையை தீர்க்க   அனைவரும் பக்க கலமாக இருந்து நாட்டின் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வண்ணம் சுமுகமான நடவடிக்கைகளுக்கு எல்லா தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பொழுது திருகோணேஸ்வர ஆலய விவகாரம் சம்பந்தமாக எடுத்துரைத்ததுடன் மதங்களுக்கு புண்படுத்தும் வண்ணம் யாரும் நடக்க கூடாது.

அது எந்த மதமாக இருந்தாலும் எந்தவொரு மதத்தினரையும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும்  செயலை அனுமதிக்க கூடாது என்ற கருத்தினை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் இது சம்பந்தமாக தெரிவித்து இருந்தார் .

இதன் பொழுது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இது பற்றி தான் அறிந்து கொண்டதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.  

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் புத்தசாசன மத விவகார மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரம நாயக்காவுடன் சேர்ந்து நேரடியாக இந்த ஆலயத்திற்கு சென்று அங்குள்ள பிரச்சினைகளை ஆராய்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

இவர்களின் செயற்பாட்டுக்கு அனைவரும் பக்கபலமாக இருந்து நாட்டின் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வண்ணம் இந்த சுமுகமான நடவடிக்கைகளுக்கு எல்லா தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென சர்வதேச இந்து மத பீடத்தின் செயளாலர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்து உள்ளார்.

இதேவேளை

அமைச்சர் தேவானந்தாவினால் மட்டுமே திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்ற முடியும் என மறவன் புலவு க சச்சிதானந்தன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருக்கோணேச்சரத்தைக் காப்பதற்கு முயற்சி எடுக்கும் ஆட்சிநிலை அரசியல்வாதி என்றும் அன்று அமைச்சராக இருந்த திருச்செல்வத்துக்கு இல்லாத வலிமையும் திறமையும் திருக்கோணச்சரத்தைக் காப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவ...
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந...

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்த...
நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - திருமலையி...