கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, March 26th, 2020

கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தெர்டபான விழிப்புணர்வுகளை அரசு பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த துறைமுகத்தின் சுகாரார பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்துடன் குறித்த பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளிடையே காணப்பட்ட சுமுகமற்ற நிலைமைகளை இரு தரப்பினரையும் அழைத்து கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களுக்கிடையே ஒரு சுமுகமான நிலையை உருவாக்கியதுடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயமான சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குறித்த துறைமுகத்தின் சுகாதாரம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? - டக்ளஸ் எம்.பி. ...
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி ...