கேப்பாப்பிலவு மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 14th, 2017

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்டகு உரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசிவருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

வலிகாமம் கிழக்கு பகுதி மக்களின் குறைகேள் சந்திப்பில் இன்றையதினம் (14) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

படைத்தாரப்பினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறும் மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பெற்றுக்கொடுத்து மக்களின் மறுவாழ்வுக்குரிய தேவைப்பாடுகளை நிவர்த்திசெய்வது போன்ற விடயங்களில் நாம் மிகவும் அவதானம் செலுத்தி வருகின்றோம்.

முன்னைய அரசில் நாம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பங்கெடுத்திருந்த நிலையில் அரசுடனான நல்லுறவு மற்றும் புரிந்துணர்வின் ஊடாக வடபகுதியில் 17500 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவித்தது மட்டுமன்றி மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தியும் விவசாய மற்றும் ஏனைய தொழில்த்துறைகளை மேற்கொள்வதற்குமான பல்வேறு வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம்.

4

அதுமட்டுமன்றி மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான இருப்பிடம், குடிநீர், மலசலகூடம், மின்சாரம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம்.

அதிலும் குறிப்பாக மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் அம்மக்களுக்கு அரசினூடாக அவற்றைப் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

கடந்த காலங்களில் யுத்தத்தை நடத்திய மற்றும் யுத்தத்தை வென்ற அரசுகளுடன் இணைந்தே நாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்து மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கவேண்டியதான சூழல் இருந்துவந்தது.

3

இந்நிலையில் இன்றுள்ள சுயலாப அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் இணக்க அரசியல் பயணத்தில் எதிர்க்கட்சி தலைமை, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைமை மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைமை ஆகிய உயர் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது சுகபோக வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் சமஷ்டி, காணிவிடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம் மற்றும் கைதிகள் விடுவிப்பு என ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை சுவீகரித்து வெற்றிகண்ட போதிலும் அவர்களால் இதுவரை நடைமுறைசார்ந்த எவற்றையும் சாதிக்கமுடியாதுள்ளது ஏன் எனவும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

இதன்போது மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இக்குறைகேள் சந்திப்பில் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன், யாழ் மாநாகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோருடன் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

 2

1

Related posts: