குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் முக்கிய கூட்டம்!

Wednesday, March 29th, 2023

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றிய முன்னேற்றக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர், முப்படைகளின் பிரதிநிதிகள், துறை சார் திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில்  ஆராயப்பட்டு பல்வேறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
தயக்கம் காட்டும் கடற்படையினர் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை பு...