குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் – சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 10th, 2024

குறிகாட்டுவான் இறங்குதறைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் தோழில் வாய்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் வேலணை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் பிரதேச செயலகமும் இணைந்து நடத்துகின்ற ஆரோக்கிய உணவகமே இன்று குறிகாட்டுவான் பகுதியில் குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைக்கப்பட்டது.

புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை அருகாமையில் அமைக்கப்பட்ட குறித்த ஆரோக்கிய உணவகத்தின் ஊடாக பாரம்பரிய மற்றம் இயற்கையான உணவுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களிற்கு வழங்குவதற்காகவும், சுற்றுலா துறையை மேம்படுத்தம் நோக்குடனும் குறித்த பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: