குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள வடகடல் நிறுவனத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு பணியாற்றும் உழியர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது குறித்த நிறுவனத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக ஊழியர்களது ஊதியகொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு ஊழியர்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த நிறுவனம் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் அதற்கான தீர்வுகளை காலக்கிரமத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன - டக்ளஸ் தேவானந்த...
மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!
ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி அமைச்சர் டக்ளசின் பணிப்பில் பகிர்ந்தளிப்பு - முதற்கட்டப் பணிகள் ...
|
|