கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Friday, April 2nd, 2021
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதன்போது தாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சரிடம் தெரிவித்த குறித்த சங்கங்களின் பிரதிநிதிகள் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தந்து தமது வாழ்வாதாரத்தை உறுதிசெய்யுமாறும் கோரியிருந்தனர்.
குறித்த பிரதழிநிதிகளின் கோரிக்கை மற்றும் பிரச்சினைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.
வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
இரணைதீவு மக்கள் விவகாரம்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை - விரைகிறது விஷட குழு!
|
|
|




