கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, June 14th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தலைமைதாங்கி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம், பொலிஸ் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுத் திடலுக்கான பாதை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்படும் நூலக கட்டடத்துக்கான காணி, டிப்போ சந்தி இராணுவ நினைவுச் சின்னம் அமைந்துள்ள இரத்தினபுரம் காணி, பேருந்து நிலைய பொலிஸ் தங்குமிட காணி மற்றும் உதயநகர் பகுதி விளையாட்டுத்திடல் காணி என்பன முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுடன் ககந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திருவையாறு படித்த மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலரது காணிகள் அம்பாள்நகர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுபாட்டில் காணப்படுவதாகவும் அவ்வாறான காணிகளை விடுவித்து தருமாறு காணியின் உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த காணிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கோரியிருந்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சுமந்திரன் மற்றும்  துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச்செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: