கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, September 15th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த காலப் பகுதியில் 196 வேலைத் திட்டங்கள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை 178 வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூரணப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவது மற்றும் பூரணப்படுத்தப்படாத வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். –

இதனிடையே

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவற்றை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...