கிளிநொச்சி மக்களை கொரோனா பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

……..
போரினால் அழிவுகளை சந்தித்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு கொறோனா வைரஸ் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் ஒருவருக்கு கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளர் வை. தவநாதன் மற்றும் விசேட பிரதிநிதி கோ. ருஷாங்கன் ஆகியோருக்கு நிலமைகளை கையாள்வது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தலுக்கு மதிப்பளித்த அரசுக்கு நன்றி - டக்ளஸ் தேவானந்தா!
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...
|
|