கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021

அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கணிசமானளவு விவசாயத்தினை மையப்படுத்திய கிளிநொச்சி மாவட்டத்தில், திட்டமிடப்பட்ட வகையில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே வறுமை தொடர்வதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், யுத்தம் நிறைவடைந்து பன்னிரண்டு வருடங்களாகின்ற நிலையில், அதிகாரத்தினை பெற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் விவசாயத்தினை விருத்தி செய்து வறுமை ஒழிப்பது தொடர்பான சாத்தியங்களை பற்றி ய அக்கறையின்றி, மக்களை உசுப்பேற்றி தவறாக வழிநடத்துவதில் ஆர்வம் செலுத்தியமையே வறுமை நீடிப்பதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தற்போது விவசாய நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக கவனம் செலுத்துதல் மற்றும் அறுவடைகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் - பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள...
தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆரய்வு!

எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி - டக்ளஸ் தேவானந்தா!
சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...
நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - ஓலைத்தொடு...