அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் – பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 22nd, 2019


வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சேவை நியமனங்களில் உள்ளீர்க்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நியமனதை உறுதி செய்து தருமாறு கோரி கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திது கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது தகுதிகள் இருந்தும் நியமனத்தில் ஊள்ளிர்க்கப்படாது தாம் நீண்டகாலமாக இந்த சேவையை செய்து வந்தபோதும் தாங்கள் நியமனத்தில் தொடர்ந்துர்ம் உள்ளீர்க்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளோம். இனதால் தற்போது சுமார் 200 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் பலர் அரச தொழில் வாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் வயதெல்லையையும் அண்மித்து வருகின்றனர்.

அத்துடன் இந்த தொழில் நிலையை நம்பியே இவர்களது எதிர்காலமும் குடும்பமும் தங்கியுள்ளது. இவர்களது இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் –

இன்று நான் அமைச்சராக இருந்தபோதும் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றுத்தருவதற்கான அதிகாரத்தை மக்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு தந்திருக்கவில்லை.

நான் கோரியதுபோல ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் என்னை நம்பி வாக்குப்பலத்தை ஜனாதிபதி கோட்டப யராஜபக்ச அவர்களுக்கு தந்திருந்தால் உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக தீர்வு கண்டிருக்க முடியும்.

வரவுள்ள தேர்தலில் அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் நீங்கள் உங்கள் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து எமது கரங்களுக்கு அதிகாரங்களை தருவீர்களானால் நாம் நிச்சயம் உங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவேன் என்றார்.

Related posts:

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் - கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்...
புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - நாடாளுமன்...
விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...