கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விசேட தீர்மானம்!

Friday, July 28th, 2023

கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிவபுரம் கிராமத்தில் நிரூபனமாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விழிப்புக் குழுக்களை வலுப்படுத்தி பொலிஸாருடன் இணைந்து செயற்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, சிவபுரம் கிராமத்தில் கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் குறித்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து விழிப்புக் குழுவினை உருவாக்கி கிராமத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் குறித்த கிராமத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  இன்றையதினம் நடைபெற்றது

000

Related posts: