காலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பருத்தித்துறை முனைக் கடற்றொழிலாளர் சங்கம் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Friday, December 28th, 2018

ஒவ்வொரு வருடமும் காலநிலையின் பாதிப்புகளால் எமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும் எமது வாழ்வாதார பாதிப்புக்கள் தொடர்பில் எவரும் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.
அந்தவகையில் நாம் எதிர்கொள்ளும் அவல நிலையை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பருத்தித்துறை முனைக் கடற்றொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த குறித்த கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –
துற்போது நாட்டின் காலநிலை ஒவ்வொரு வருடமும் மாற்றங்கண்டு வருகின்றது. இதனால் எமது பகுதி கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தொழில் செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எமது தொழிலாளர்களது வாழ்வாதார நிலைமைகளை யாரும் கண்டுகொள்வதில்லை.
கடந்த காலங்களில் தாங்கள் அமைச்சராக இருந்த சமயம் எமது பகுதி கடற்பரப்பு ஆழப்படுத்தப்பட்டு தொழில் துறையை மேம்படுத்தி தந்திருந்தீர்கள். அதுமாத்திரமல்லாது பல தொழில் துறை உபகரணங்களையும் வாழ்வாதார உதவிகளையும் பெற்றுத்தந்துள்ளீர்கள். இதனால் நாம் பல நன்மைகளை கண்டிருக்கின்றோம்.
ஆனாலும் தற்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லாதுள்ளது. இதனால் எம்மீது அக்கறை உள்ள நீங்கள் எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
குறித்த பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம், தற்போது எம்மிடம் உடனடித் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான அதிகாரங்கள் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. ஆனாலும் துறைசார் தரப்பினரது கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

48423758_1009761439206983_2803592459978801152_n 49101834_496969324125434_6591857420115378176_n

Related posts: