காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 21st, 2019

வடபகுதியில் நலிவுற்று கிடக்கும் தொழில் துறையை மீளவும் கட்டியெழுப்பும் முயறையாக காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுமென கடல்தொழில் மற்றும் நீரகவளமூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திவித்துள்ளார்.

காரைநகர் சீனோர் நிறுவனத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் வியஜம் மேற்கொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆரய்ந்தறிந்துகொண்டார்.

காரைநகர் பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த நிறுவனம் தொடர்பில் துறைசார் தொழிலை மேற்கொள்ளும் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறித நிறுவனம் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் அமைச்சர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் –

படகு கட்டுமாணத்தை பிரதானமாக கொண்டு செயற்படும் இந்த சீனோர் நிறுவனம் கடந்த காலங்களில் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தும் தனது செயற்பாடுகளை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றது.

ஆனாலும் இந்த நிறுவனத்தினூடாக இப்பிரதேசத்தின் மக்கள் அதிகளவில் நன்மைகளை பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

அதற்காக இந்த நிறுவனத்தின் பங்காளர்களான நோர்வே நாட்டின் துறைசார் பிரதிநிதிகள் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

அவர்களது பங்களிப்புடன் உள்ளூர் முதலீட்டாளர்களதும் புலம்பெயர் தேச முதலீட்டாளர்களையும் முதலீடு செய்ய முன்வருமாறு நான் அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

எனது இந்த முயற்சிக்கு முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பார்களானால் நிச்சயம் இந்த நிறுவனத்தினது செயற்பாடுகளை மட்டுமல்லாது கடல் வளம் சார் தொழில்துறையை சிறப்பான முறையில் கட்டியெளுப்பி அதனூடாக எமது மக்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள முடியும் என நம்புகின்றேன். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை மக்கள் தோல்வியடையச் செய்துவிட்டனர்.
ஆனாலும் மத்தியில் நான் கொண்டுள்ள தேசிய நல்லிணக்கம்.காரணமாகவும் என்மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவும் எனக்கு மிகப்பெரும் அமைச்சை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இந்த அமைச்சை நான் விரும்பி பெற்றுக்கொள்ளாவிட்டாலும் அதை மக்களில் நலனுக்காக முழுமையாக பயன்படுத முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றேன்.

இப்பகுதியில் கடல்பாசி வளர்ப்பு, கடல் வாழ் உயிரினங்களை மேலும் மேம்படுத்தி அதனூடாக சிறுதொழில் முயற்சிகளை உருவாக்குவதுடன் இந்த சீனோர் நிறுவனத்தின் தரத்தையும் மேம்படுத்த நான் முயறைகளை மேற்கொள்வேன்.

அத்துடன் நான் கூறிவருவது போன்று எமது மக்கள் என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது வழிமுறையை நோக்கி அணிதிரண்டு வருவார்களானால் எனது கரங்களுக்கு தமது அராலையல் பலத்தை வரும் சந்தர்ப்பத்தில் தருவார்களானால் அதனூடாக நான் நிச்சயம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடியுமானவரை தீர்வுகண்டு தருவேன் ந்ன்றார்.

Related posts:


சுயநலம் கொண்ட காணாமல் போனோர் சங்கம் வேண்டாம் - பரிகாரம் பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு - பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ்...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...