காணாமல் போனோர் விவகாரம் – மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021

வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்.மாவட்ட செயலகத்தில் காணாமல் போன உறவுகளைச் சந்தித்துள்ள நிலையில் எவ்வகையான முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்து கூறுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் போன உறவுகளின் உறவுகளை சந்தித்த அவர்களுக்கு இவ்வகையான பரிகாரங்களை முன்னெடுக்கலாம் என குழு ஒன்றின் மூலம் தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டோர், விடுதலைப்புலிகளால் காணாலாக்கப்பட்டோர், மற்றும் தெரியாதவர்களால் காணாமலாக்கப்பட்டோர் என மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்ற விடயத்தை தெளிவு படுத்தல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொறுப்பில்லாத கடன்களை ஏற்படுத்துதல், வீட்டுத்திட்டம் மற்றும் அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய சிபார்சுகளை உள்ளடக்கிய எழுத்து மூல ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியை விரைவில் சந்தித்த தீர்வொன்றைக் காண்பதற்கு எண்ணியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்...
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்து ஆரம்...