காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை – அமைசர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 25th, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரயாடி அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தம் எமது மக்களின் உயிர் உடமைகளுடன் அவர்களது உணர்வுகளையும் கொன்றுவிட்டது. இத்தகைய நிலைமைகள் உருவாக கடந்தகால தமிழ் தலைமைகளும் அவர்களது சுய நலன்ககும் போலித் தேசியமுமே காரணம்.

கடந்த 5 வருடங்களாக நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஆட்சி செய்த அரசுக்கு தமது சுயனலன்களுக்காக முண்டுகொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வுகளை கண்டிருக்க முடியும்.

ஆனால் அவர்கள் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவத்கை ஒருபோதும் விரும்பியது கிடையாது. மாறாக மக்களது உணர்வுகளையும் துயரங்களையும் வைத்தே தமக்கான அரசியல் இருப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் நாம் மக்களது பாதுகாப்பும் அவர்களது கௌரவமான எதிர்காலம் தொடர்பிலும் தூர நோக்குடன் சிந்தித்து எமக்கு கிடைத்த குறைந்தளவான அரசியல் அதிகாரங்களை கொண்டு முடியுமான சேவைகளை செய்து கொடுத்திருந்திருக்குன்றோம்.

அந்தவகையில் காணாமல் போன உறவுகளின் உணர்வுகளை நானும் அனுபவுத்தவன் என்ற ரீதியில் அவர்களுக்கான பரிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றவகையில்
காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவர்களது உணர்வுகள் தொடர்புல்
அரசின் கவனத்து கொண்டு உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளேன்.

அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலும் 29 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலும் 31 ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலும் அன்றைய தினம் நண்பகல் வவுனியாவிலும் காணாமலாக்கப்பட்ட உறவுகளை சந்திக்கவுள்ளேன்.

இந்த சந்திப்புகளில் குறுத்த மாவட்டங்களைச் சேர்ந்த உறவுகள் கலந்து தமது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளர்.

Related posts:

13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை...
யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட...
இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!
இளைஞர் யுவதிகளுக்கு கரங்கொடுப்போம் கௌரவமான வாழ்விற்கு வழியமைப்போம்: வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் சூளு...