கரியாலை நாகபடுவான் மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, March 6th, 2020
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் நன்னீர் மீன்பிடி கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சந்திப்போன்று இன்றையதினம் குறித்த சங்க மண்டபத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த பிரதேசத்தினதும் மக்களதும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகா ஆராய்ந்தறிந்துகொண்டார்.
நீண்டகாலமாக இப்பிரதேசம் எந்தவொரு அபிவிருத்தியிலும் உள்ளடக்கப்படாத நிலையில் இங்கு வாழும் மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதுடன் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுதி மக்கள் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இப்பகுதி மக்களது வாழ்வாதாரம் கருதி 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் இப்பகுதி குளத்தில் விடப்பட்டுள்ளன. மேலும் 5 இலட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது இந்த அவல நிலைமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான சந்தர்ப்பம் மக்கள் ஒவ்வொருவரது வீட்டின் கதவுகளையும் தட்டி நிற்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தை உங்களதும் உங்கள் எதிர்கால சந்ததியினரது நலன் சார்ந்ததாகக் கருதி சிந்தித்து நீங்கள் பயன்படுத்துவீர்களானால் நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் நான் வெற்றிகண்டு தருவேன்.
நான் ஆயுதப் போராட்ட வழிமுறையை கைவிட்டு அரசியல் ஜனநாயக வழிமுறையில் இருந்து வருவது எமது மக்கள் ஒரு நிலையான வாழ்வியல் சூழ் நிலையை உருவாக்கி கொடுப்பதற்காகவே அன்றி எனது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல. எனது அந்த முயற்சியில் மக்களாகியா உங்களது ஆதரவுப்பலம் கிடைக்குமானால் நிச்சயம் அந்த சூழ்நிலையை நான் உருவாக்கி காட்டுவேன் என்றார்.
இதன்போது கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவனாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|
|




