கனகராயன்குளம் பகுதி பொதுஅமைப்புகள் தமது பிரதேச பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஆராய்வு!
Saturday, November 24th, 2018
வவுனியா கனகராயன்குளம்பகுதி பொது அமைப்புகள் தமது பகுதியில் மக்கள் நாளாந்தம் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் கிரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா கனகராயன்குளம் பகுதி பொது அமைப்புகளுடன் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போதே குறித்த பொது அமைப்புகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இன்றையதினம் தங்களைச் சந்திப்பதற்காக கனகராயன்குளம் பகுதியை உள்ளடக்கிய மாதர் அபிவிருத்தி அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வருகைதந்துள்ளோம்.
காரணம் கடந்த காலங்களில் எமது பகுதி மக்கள் பல்வேறு புறக்கணிப்புகள் காரணமாக பல அபிவிருத்திகளை இழந்துள்ளனர். ஆனால் தற்போது மக்களுக்கு பாரபட்சமற்று சேவையாற்றும் தாங்கள் எமது அபிவிருத்தியின் அமைச்சராக இருப்பதால் எம்மிடம் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.
அந்தவகையில் எமது பிரதேசத்தில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகள் முதற்கொண்டு குறிப்பாக வீடமைப்பு, வீதிபுனரமைப்பு, மின்சாரம், மலசலகூடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தமது பகுதிகளில் காணப்படுவதாகவும் இவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதுடன் எமது பகுதியின் பொது அமைப்புகளின் அபிவிருத்தியிலும் அக்கறை செலுத்துமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
பொது அமைப்புகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதுவித பாரபட்சங்களோ முறைகேடுகளோ இடம்பெறாதவகையில் மக்களுக்கான சேவையைச் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.
அந்தவகையில் உங்களது பிரச்சினைகள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்பட்டு துறைசார் அமைப்பினருடன் கலந்துரையாடி விரைவாகத் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.




Related posts:
|
|
|


