“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனத்துவம் அல்ல சமத்துவம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 21st, 2020

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இனதுவமல்ல சமத்துவம். இங்கு சகல இன மக்களினதும் இனத்துவ அடையாளங்கள் சமத்துவமாகப் பேணப்கபடும். இதை நான் நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இலங்கையின் ஒன்பதாவது புதிய நாடாளுமன்றில் நேற்றையதினம் கொள்கைவிளக்க உரை நிகழ்த்தியபோது ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீட்டிற்கு அமைய புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் அதேவேளை, அரசாங்கத்தின் முதல் பணியாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் - பலாலியில் டக்...
அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு: அணி திரளுமாறு முல்லை மண்ணில் அமைச...

தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் - முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!
டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூ...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!