கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புவோருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, May 27th, 2021
கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு தேவையான ஒத்துபை்புக்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக வருமான மார்க்கமாக கடல் பாசி உற்பத்தியில் அனைவரும் ஈடுபடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினரின் அழைப்பினையேற்று நேற்று அங்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் நேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக லந்துரையாடியிருந்தார்.
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்ற பெண் ஒருவர், கடல் பாசி உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தேவையான தடிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடல்பாசி உற்பத்தி தொடர்பான சாதக பாதகங்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழில் முயற்சியின் ஊடாக மேலதிக வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


