கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020

ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள் அவர்களுக்கான வருடாந்த நினைவு கூரலையும் அதற்கான பிதிர்க் கடன்களையும் நிறைவேற்றி வருவது வழமை.

ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால்  குளங்கள் மற்றும் கடலோரங்களில் இத்தகைய பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த நினைவு கூரும் தினமான ஆடி அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் அத்தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது தந்தையருக்கு பிதிர்கடனை நிறைவேற்றுவதற்கு பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் குறித்த தரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவையில் அது தொடர்பில் பரஸ்தாபித்திருந்தார்.

இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதிகமாக இருப்பதால் அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரிகைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமை...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...

பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நட...
இத்தாவில் மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வு!