இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020

இலங்கை இந்திய  கடற்றொழிலாளர்களுக்கிடையிலான  பிரச்சினைகள் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இம்மாத  நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளின் கடற்றொழில் அமைச்சுகள் மட்டத்திலும், இலங்கை இந்திய ஒன்றிணைந்த மீனவர்கள் செயற்குழு மட்டத்திலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த  பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 16ஆம் திகதி அல்லது 23ஆம் திகதி, தொலைகாணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ளது.

இதுதொடர்பில் ஏற்கனவே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பலசுற்றுகளாக இடம்பெற்றுள்ள போதும், அவற்றின் போது இணங்கப்பட்ட விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற நிலைமை நிலவுவதால், உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், உரிய தீர்வுகளை காணும் பொருட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய மக்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தா...
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...
கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...