கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Friday, March 3rd, 2023
யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
விரைவில் பனை தென்னை அபிவிருத்தி சபை போன்று கடலட்டை அபிவிருத்தி சபையை உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.
மேலும் வடக்கில் தற்போது ஆயிரத்து 700 கடலட்டைப் பண்ணைகள் வந்துள்ளன என்றும் கடலட்டை மூலம் கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மடங்காக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


