கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 7th, 2022

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறுதொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கான நேரடி விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

அரியாலை கடல் பிரதேசத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அரியாலை கிழக்கு கடல் கிழக்கு கடல் பிரதேசத்தில் படகில் சென்று நிலமைகளை  அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாரம்பரியத் தொழில்முறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட மாடடாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதேவேளை,  கடலட்டை பண்ணை அமைப்பதற்கான இடங்கள் எவ்வாறான அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன என்பதையும், இதனால் பாரம்பரியத் தொழில் முறைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள ஆய்வு ரீதியான நடவடிக்கைகளையும் இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்

இதேவேளை அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எல்லாம் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படாது என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாரம்பரியத் தொழில் முறைகளைப் பின்பற்றுகின்ற சிறுதொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாடடுடன் மாத்திரமே கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அரியாலை கிழக்கு கடல் பகுதியில் கடலட்டைப் பண்ணகளுக்கு அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்ட பின்னர் பிரதேச மக்களடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்

Related posts:

வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் ட...
கோடிக் கணக்கில் செலவிட்டு - மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பதவிக்கு வந்தவர்கள் நாம் அல்லர்: அமைச்ச...
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது - அமைச்சர் டக்ளஸிற்கு காணி ...

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவ...