கடற்றொழில் சங்கங்கள் அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, June 20th, 2023

கடற்றொழில் சங்கங்களுக்கு இடையில், அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான  கட்டமைப்பு கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லாவற்றிற்குமே அமைச்சரே தீர்வினை காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனம், கடற்றொழில் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்தல், கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணை விநியோகம், குருநகர் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் கட்டப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்கள் உட்பட பல்லேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: