கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி நியமனம்!
Thursday, June 20th, 2024
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) வழங்கப்பட்டது.
கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய துஷார லொக்குகுமார அதன் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர்; சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி தேசிய பெருந்தோட்ட கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், இலங்கை துiமுக அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், பசுமைப் பல்கலைக் கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கமையாற்றியுள்ளதுடன் அவர் இலங்கை நிர்வாக சேவையில் சிறந்த அனுபவம் கொண்ட அதிகாரியுமாவார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


