கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!
Thursday, January 25th, 2024
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும், அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் போது இன்று விபத்தில் காலமான நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அவர்கள் அன்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் இருந்து இறால் குஞ்சுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை பண்ணைகளில் வளர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களின் செயற்பாடுகளால் உள்ளூர் இறால் குஞ்சு உற்பத்தியாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளதாகவும் , இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பிரஸ்தாபித்தார். அத்துடன் அமைச்சர் தென் இலங்கை களவிஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
000
Related posts:
|
|
|


