கடற்றொழில் அமைச்சின் 2023 ஆண்டிற்கான செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்!

Monday, January 2nd, 2023


பிறந்திருக்கின்ற 2023  ஆண்டில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே.  தயானந்தா மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், நிறைவேற்றுப் பணிப்பாளர்கள், கற்றொழில் அமைச்சரின் செயலாளார்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே

கடற்றொழில் அமைச்சரின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள், இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து புது வருட வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா - டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடி...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...

“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் பரிகாரம் - அமைச்சர் டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு - மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விச...