கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Friday, May 31st, 2024
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
அதேநேரத்தில் எமது பிரதேசங்களை நோக்கி வருகின்ற தனியார் முதலீடுகள் எமது சூழலியலை பாதிக்காத வகையிலும், எமது மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலும் இருக்குமாயின், அவற்றை உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சுழிபுரம் திருவடிநிலை பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கடல் சுற்றுலா பண்ணை தொடர்பாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனியார் முதலீட்டில் சுமார் 70 ஏக்கரில் விஸ்தீரனத்தில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டு வருகின்ற இந்தப் பண்ணையால் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து, குறித்த பகுதிக்கான கள விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்மந்தப்பட்ட நிலமைகளை ஆராய்ந்ததுடன், கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் பாதிக்காத வகையில் திட்ட வரைபொன்றை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
000
Related posts:
|
|
|


