கடற்றொழிலாளர்களின் இழப்புக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளினால் வாழ்வாதார இழப்புத் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயத்தினைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பருத்துத்துறை முனைப் பிரதேச கடற்றொழிலாளர்கள் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.
மேலும், கடற்றொழிலாளர்களின் ஏனைய கோரிக்கைகளையும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் உறுதித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர்கள், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுளை மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலார்களினால் கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத தொழில் முறைகளும் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
Related posts:
|
|