கடற்றொழலாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் கடற்றொழிலாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தியவையாக அமையுமாயின் அவற்றுக்கு தன்னுடைய முழுயைாான ஆதரவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாறாக கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வீம்புத்தனமானவையாக இருக்குமாயின் அவற்றை கண்டுகொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், “எம்மிடம் கடற்றொழில் சார்ந்த ஒரு கலாசாரம் உண்டு. அதனை நாம் பாதுகாப்பதுடன், மேலும் முன்னோக்கி நகர்ந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக நீண்ட திட்டங்கள் இருக்கின்றன – அதற்கான விருப்பங்கள் உள்ளன. அவற்றை செயற்படுத்தி உங்களை தூக்கி நிறுத்த நான் தயாராகவே உள்ளேன்.
ஆனால் மக்கள் விருப்பத்தோடும் வெளிப்படையாகவும் முன் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்ட நிலையில், வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை முழுமையாக தடுத்து நிறுத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|