கடற்படை – நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!
Thursday, October 27th, 2022
இலங்கையின் கடல் பரப்பில், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் அமைச்சின் நாரா நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் மூலம் நாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடப்பாடுகள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
இதனிடையே
வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன், நாடளாவிய ரீதியில் கண்டல் தாவரங்களை நாட்டி பராமரிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறித்த திட்டத்தின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் பிரதேசத்தில் கண்டல் தாவரங்களை நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உடனடியாக சுமார் 400 தொழில் வாய்ப்புக்களும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


