எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும் – டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித்து திருமலை மக்கள் நம்பிக்கை!

நாம் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழும் வகையில் இடர்பட்டிருந்த எமக்கு குடியிருப்புக்களை அமைத்து எம்மை வாழவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும் என உப்புவெளி பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பின்போது மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்
அசாதாரண சூழ்நிலை காரணமாக 1993 ஆம் ஆண்டு திருமலை மாவட்டம் உள்ளிட்ட ஏனைய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல துன்பங்களுடன் வாழ்ந்துவந்த எமது நிலைமைகளை கருத்திற்கொண்டு ஆனந்தபுரி, நித்தியபுரி, தேவாநகர், ஆகிய குடியிருப்புகளை அடிப்படை வசதிகளுடன் அமைத்து எமக்கான இயல்பு சூழ்நிலைக்காக பெரிதும் பாடுபட்டவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்பதை நாம் என்றும் நன்றி கூருகின்றோம்.
அத்துடன் வடக்கு கிழக்கில் முதன் முறையாக சுமார் இடண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கிய பெருமையும் டக்ளஸ் தேவானந்தாவையே சாரும். இதில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்ததையும் நினைவு கூருகின்றோம்
அந்தவகையில் எமது வாழ்வுக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாது வாழும் வரலாறாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா எனவும் தெரிவித்தனர்..
இந்நிலையில் எமது மாவட்டத்தில் தற்போதும் மக்கள் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடனும் இடர்பாடுகளுடனும் வாழ்ந்துவரும் நிலையில் எமக்கு வளமானதொரு எதிர்காலத்தை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உருவாக்கித்தரவேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும் எனவும் சுட்டிக்காட்னர்
இதன்போது வருகைதந்திருந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர். இன்றையதினம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|