எமது கரங்கள் பலப்படுத்தப்படுவது மக்களுக்கான பலன்களாவே மாறும் – சாவக்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

வீணைக்கு புள்ளடியிட்டு மக்கள் எமது கரங்களை பலப்படுத்தினால் அவை மக்களுக்கான பலன்களாக மாற்றமடையும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனைக்கோட்டை சாவக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் திசைமாறிச் சென்று எமது மக்களிடம் இருந்த வாழ்வியல் வளங்களையும் அழித்துள்ளது.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளி என்ற வகையில் குறித்த அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
அதனால் அழிக்கப்பட்ட வாழ்வாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற மன விருப்பின் காரணமாகவே தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு தன்னுடைய கரங்களை பலப்படு்த்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற சில வருடங்களில் மக்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|