எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசிடம் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022

விவசாயிகளிடம் இருந்து 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தபின்னர் குறித்த தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புககளுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதன்போது, நெல் கொள்வனவிற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கமக்காரர் அமைப்புக்களினால் கேட்கப்பட்ட நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது, “எதிர்வரும் திங்கள்கிழமை குறித்த அமைச்சரவை தீர்மானம் கிடைக்க இருக்கிறது.

அதன் பின்னர் 75 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்” என்று அமைச்சர் மஹிந்தானந்தா கூறியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  - அமைச்சரிடம் டக்ளஸ் தேவான...
இம்பசிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!